சங்கல்பம் என்பது, இன்ன நாளில், இந்த இடத்தில், இன்ன நோக்கத்திற்காக, இந்த பூஜையை செய்யப் போகிறேன் என்ற அறிவிப்பதாகும். இப்படி பகிரங்கமாக உறுதி மொழி எடுப்பதால் அதிலேயே மனம் குவிந்திருக்கும். இந்த சங்கல்பத்தில் காலத்தைக் குறிப்பிடும்போது, இந்த மன்வந்தரத்தில், இந்த யுகத்தில்,இந்த ஆண்டில், இந்த ருது, மாதம், நட்சத்திரம், திதியில் இதைச் செய்கிறேன் என்பதை அறிவிப்பார்கள். இந்தப் பூமியில் உள்ள பல பிரதேசங்களீல், மேரு மலைக்குத் தெற்கில், ஜம்புத்வீபத்தில், பாரத வர்ஷத்தில், பரதக் கண்டத்தில், குறிப்பிட்ட……. இந்த நதிக்கரையில்……….. இந்த நகரத்தில்………. இந்த காட்டிற்கு அருகில் பூஜை/ ஹோமம் செய்கிறேன்
Comments
Post a Comment